அமைதியான குளம்...
கல்லெறிந்தவர்கள் அநேகம்
சலனம் ஏற்பட்டாலும்
சட்டென அமைதியாகி
உள்வாங்கப்பட்ட கற்கள்
நிர்ச்சலனமாகின்றன.
--------------------------
உள்வாங்கப்பட்ட கற்கள்
நிர்ச்சலனமாகின்றன.
இந்த இரு வரிகள் ஏதேதோ சொல்கின்றன.... ரிஷி அய்யா நீங்க பிஹெச்டி வாங்கியாச்சு கவிதையில் :)
மேன் மேலும் எழுத வேண்டுகிறேன்.
- Show quoted text -
2008/7/8 Raveendran Krishnasamy
2008/7/7 Shylaja N
வரவர ரிஷியெல்லாம் காதல் பேசறங்கப்பா:):)
>>>>>> ரிஷியா ஆகுறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் ஷைலஜாக்கா...?
:):):):) எஸ்கேப்....
2008/7/8, Raveendran Krishnasamy
2008/7/7 விஜி சுதன்
என்னிடம் கிரீன் கார்டு இல்லைதான்
நான் மஸ்சாசூட்டில்
ஆராய்ச்சி பண்ணவில்லைதான்... <<<
நீங்க உயரம் ஆகறீங்க மகிழ்ச்சி அதுக்காக பொண்ணுங்களை இப்படி மட்டமாக்கப் படாது அண்ணே :))))))
ஆனாலும் பெண்ணே
நான் உன்னிடம் வைத்திருப்பதோ
சத்தியமான காதல் .....
சத்தியம் என்றும் தோற்பதில்லை....
இதோ இந்த நொடி கூட
என் இதயம்
உன் பெயரைத்தானே ஒலிபரப்புகிறது... ?
உண்மையான காதல்
உயர வைக்கும் பெண்ணே....
உருவத்தில் நான் -
உயராமலிருக்கலாம்...
எண்ணங்களில் நான்
உயர்கிறேன் பெண்ணே....
என்னை
உயர்த்தியது நீ தானே.... ?
பெண்ணிடம் பேசுவது போல் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் வழிகிறது :))
>>>>>ஆஹா..... வந்துட்டாங்கய்யா... வந்துட்டாய்ங்க....
:):):)
அன்புள்ள சகோ விஜி,
இது நம்பிக்கை கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது. காதல் என்ற கருத்தில் கவிதை இருக்கவேண்டும் என்று போட்டி விதி வகுக்கப்பட்டிருந்தது.
நமக்கும் அதற்கும் காத தூரமாச்சே...? அப்றம் மண்டையக் குழப்பி ஒரே யோசனை பண்ணி எழுதினது. அப்போ நிலாவோட காதல் கவிதைகள் மனசை அள்ளும்.
இந்தக் கவிதையில் வருவது போல் நான் ஐஐடியில் படிக்கவில்லை. ஆனால் அதேபோல் தரம் வாய்ந்த ஒரு இண்ஸ்டிடியூட்டில் படித்திருந்தேன். அப்பொழுதெல்லாம் கடைசி பெஞ்ச்தான். ஐஐடி புரபசர்கள்(ஐஐடி புரபசர்கள் எங்களுக்கும் எங்களது புரபசர்கள் ஐஐடிகளுக்கும் பாடங்கள் எடுப்பர்...) அங்கே பாடங்கள் நடத்திக்கொண்டிருக்க, நமக்குத்தான் மரமண்டையாச்சே... ஊஹூம் பாடங்கள் மண்டையில் ஏறாமல் கடைசி பெஞ்ச்சில் பரிவாரங்களுடன்.
(((எப்படியோ டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் மட்டும் கொஞ்சம் சொல்லிக்கறாப்ல மார்க்ஸ் வரும். அப்றம் இந்த் Systems Simulationல் Institute First வர முடிஞ்சது அவ்ளோதான். System Analysis and Designலோ அவ்ளோ ஆர்வமா இருந்தும் கடைசில 53 மார்க் எடுத்து ஜஸ்ட் பாஸ்தான் கெடச்சது. Programming ல Logic வேணுமா... நமக்குத்தான் அது இல்லையே.... அதுலயும் ஜஸ்ட் பாஸ்தான்.
Structure and Data Manipulationல அந்த ஐஐடி வாத்தியார் சொல்றதும் புரியாது நாங்க என்ன படிக்றோம்னு எங்களுக்கும் புரியாது.... கடைசில எப்பவும் போல் பார்டர்தான். ம்ம்ம்... நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்ன்றது சரிதான்னு அப்ப புரிஞ்சது... சரஸ்வதிக்கும் உனக்கும் ஜன்ம பகைன்னு தவமும் அனுபவங்களும்ன்ற தொடர்ல வருமே.... அதே.... அதே... நிஜம்...! இப்பவும் அதே மாதிரிதான் மக்குப் பையனாத்தான் இன்னமும் இருக்கேன்.... !!! )))
அப்பல்லாம் பசங்க இப்டித்தான் ஏத்திவிடுவாங்க. எங்க வகுப்பில், 'டேய்... அந்தப் பெண் உன்னத் தாண்டா பாக்றா.... அப்டீன்னு...' ஒருத்தன உசுப்பி விட்டாங்க. ஆனா அவன் அதை நம்பவேயில்லை. தெனமும் எங்க பசங்க அவன ப்ரைய்ன் வாஷ் பண்ணப் பண்ண அவன் நெஜமாவே ரொம்ப அப்பாவியா நம்பினான்.
ஆனா உண்மையில் அப்டி எதுவும் இல்லை.
அந்தப் பெண்ணோ என்னிடம் மட்டும் கொஞ்சம் ஃப்ரீயா பேசுவாங்க. அவங்க அப்ப அமெரிக்காவுல மேலே பி.ஹெச்.டி பண்ணப் போற விஷயம் எங்கிட்ட மட்டும் சொன்னாங்க.
நானும் என்னோட அமெரிக்கா போற எண்ணம் (அப்பதான் கம்ப்யூட்டர்கள் டாஸ்சிலிருந்து விண்டோஸுக்கு வர்ர காலம் நாங்க 1994- 1995 Passed out Batch )
குறிக்கோளும் சொல்லிட்டு, "யார்ட்டயும் சொல்லவேணாம்"னு சொன்னா... அவங்களோ அட்சரம் பிசகாம எல்லார்ட்டயும் சொல்லிட்டாங்க.
அப்றம் அதுக்கப்றம் எங்க க்ளாஸ்மேட்ஸ் எல்லோருமே அப்பவே இங்க வந்து செட்டிலாகிட்டாங்க. நாந்தான் ரொம்ப லேட்... எல்லாத்லயுமேதான்...!
அரைக்ளாஸ்லருந்து கடைசியா படிச்ச கம்ப்யூட்டர் வரைக்கும் எல்லாமே கோ-எட் தான். ஆனா காதல் அது இதுன்னு எதுவுமே வர்லே... அதுல் விழக்கூடாதுன்றதுல ரொம்பத் தெளிவா இருந்தேன். ஏன்னா என்னோட க்ளாஸ்மேட்ஸோட நிலைமைகளைக் கண்கூடா பாத்திருக்கேன்.... ஒவ்வொரு வகுப்பிலும் யாராவது ஒரு மாணவனும் மாணவியும் ரொம்ப ரகசியமான லவ் இருக்கும்.
அந்தப் பையனோட நிலையிலிருந்து கிறுக்கிப் பாத்தேன். அது க்ளிக் ஆய்டிச்சி.
எங்க கம்ப்யூட்டர் கல்விய மையமா வச்சி ;மெஷின்'னு ஒரு கதை எழுதினேன். முழுக்க முழுக்க காதல்தான். அப்ப அது ரொம்ப பரவலா பேசப்பட்டது.
--
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
--
அன்புடன்
சக பயணி
ரவீந்திரன்
www.rishiraveendran.tk
www.rishiraveendran.com
"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
No comments:
Post a Comment