Thursday, November 15, 2007

புன்னகைப் பூக்களை உதிர்க்கும் பூச்செடியே....

ஹாய் விஜி.... இதோ நிலாரசிகனுக்குப் போட்டியாக நானும் ஒரு காதல்(?) கவிட்டுரை எழுதறேன்...

இது கவிதை அல்ல... கட்டுரையும் அல்ல...

புன்னகைப் பூக்களை
உதிர்க்கும்
பூச்செடியே....

நீ
பூவாக
இருக்கவேண்டிய நேரத்தில்
பூவாக இருக்கவில்லை.

காயாக
இருக்கவேண்டிய நேரத்தில்
கா யாக இருக்கவில்லை

கனியாக
இருக்கவேண்டிய நேரத்தில்
கனியாக இருக்கவில்லை

நீ ஏன் மெளத்தினால்
என்னைக் கொல்கின்றாய்....?

அன்பே உன் இதயம்
என்ற நிலவில் முதன் முதலாய்
காலடி வைத்ததால் நானும் ஒரு ஆர்ம்ஸ்ட்ராங்கே....

அதோ அந்த கிழக்குவானம் ஏன் சிவந்திருக்கின்றது தெரியுமா...?
அதோ அந்த தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள்கள் ஏன் சிவந்திருக்கின்றன தெரியுமா....?

அவைகள் உன்னைப் போல் அழகிய சிவந்த கன்னங்களைப் பெறவில்லையே என்று வெட்கிச் சிவக்கின்றன.


நீ சுவாசிப்பதால்தானே
நான் உயிர் வாழ்கின்றேன்....?
நீ சுவாசித்து வெளிவிடும் காற்றைத்தானே
நானும் சுவாசிக்கிறேன்....?
நீ நடக்கும் அடிகளைப் பின்பற்றித்தானே
நானும் நடந்து வருகின்றேன்....?

உன் ஜீவரேடியோ ஒலிபரப்பும்
உன்னுணர்வுகளைத்தானே
என் ஜீவரேடியோ பண்பிறக்கம் செய்கின்றது....?

அன்றொரு நாள் முத்தம் கேட்டேன்
முத்தமிடத்தெரியாது என சொன்னாய்.

எனக்குத் தெரியும்
நீ சொல்வது பொய் என்று
ஏனெனில்
நீ கோடி வீட்டுக் குழந்தையைக்
கொஞ்சி முத்தமிடுவதை
நான் பலமுறை கண்டு களித்திருக்கின்றேன்.....

நீ ஏன் மெளனத்தையே
பதிலாக்கு்கின்றாய்...?

மு.மேத்தா சொல்வது போல்

எழுது...எழுது
நீ என்னைக் காதலிக்கவில்லை
என்றாவது ஒரு கடிதம் எழுது....

என் இதயம் ஒலிபரப்பும்
சோககீதங்களை
ஏன் உன்
வானொலியில் மட்டும் இசைப்பதேயில்லை....?

உன் இதயத்தின்
லப்..டப் ஒலியினை
டிஜிட்டல் துல்லியமாய்
என்னால் கேட்கமுடிகின்றதே...!
ஓ....
நான் வாழ்வது உன்னிதிய்த்திலல்லவா.....?

அதோ அந்த சூரிய்ன் கூட
நீ கோலம் போடுவதைப் பார்த்துதானே
உதிக்கின்றான்....?

நிலவு கூட
உன்னைக் கண்டு
பொறாமைப்படுகின்றதே....?

மழைத்துளி கூட உன் மீது பட்டபின்
குளிர்கின்றதே....

எலக்ட்ரான்கள் கூட
உன்னைக் கண்டு
தன் ஓட்டத்தினை நிறுத்துகின்றனவே....?

நியூட்டன் கூட
உன் காந்தஈர்ப்பினைக்
கண்டபின்தானோ்
புவியீர்ப்பு விதியைக் கண்டுபிடித்திட்டார்...?

அள்ள அள்ளக் குறையும்
இது பெளதிகம்
ஆனால் உன்னிடம்
என் காதலும் அன்பும் மட்டும் ஏன் குறையவில்லை...?
பெளதிகம் பொய்யோ....?

Properties of Matter ல் உள்ள திட திரவ நீர்ம
நிலைகளாக நான் மாறிட்டாலும் கூட
அதிலும் நீயே மூலக்கூறாய் இருக்கின்றாய்....


சூரிய காந்தி வாடிய
ஒரு மாலைப்பொழுதினில்
உன் திருமணப் பத்திரிகையை
நீட்டினாய்...

என்னைவிட்டுப் பிரிவதாய் சொன்னாய்....

பிரி.....பிரி....
நீ என்னை விட்டுப் பிரி....
என் இதயத்தை சுக்கு நூறாகப் பிரி.....
அதிலும் கூட
லப்...டப் ற்குப் பதிலாக
உன் பெயரே ஒலிக்கும்...



புன்னகைப் பூக்களை
உதிர்க்கும்
பூச்செடியே....

நீ
பூவாக
இருக்கவேண்டிய நேரத்தில்
பூவாக இருக்கவில்லை.

காயாக
இருக்கவேண்டிய நேரத்தில்
கா யாக இருக்கவில்லை

கனியாக
இருக்கவேண்டிய நேரத்தில்
கனியாக இருக்கவில்லை

பின்குறிப்பு:

இதன்மூலம் சகல்ருககும் தெரிவிப்பது என்னவென்றால்
என்னாலும் காதல் கவிதை எழுதமுடியும் என .....
குறிப்பாக கீதாம்மா,விஜி & தேகியின் கவனங்களுக்கு.....

பெரியவங்களே.... நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேனா....?

=================================================================================
rom sweetsuresh
reply-to Piravakam@googlegroups.com,
to தமிழ் பிரவாகம் ,
date Oct 24, 2007 11:19 PM
subject [Piravakam] Re: ரிஷியின் பக்கம்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details Oct 24



Reply


> ஹாய் விஜி.... இதோ நிலாரசிகனுக்குப் போட்டியாக நானும் ஒரு காதல்(?) கவிட்டுரை
> எழுதறேன்...

;-)))))))))))

> புன்னகைப் பூக்களை
> உதிர்க்கும்
> பூச்செடியே....

வித்தியாசமா இருக்குங்க!

> நீ ஏன் மெளத்தினால்

மௌனத்தினால்.
காதல்னா யாரும் தடுமாறுவாங்க போல இருக்கே! ;-)


>
> அன்பே உன் இதயம்
> என்ற நிலவில் முதன் முதலாய்
> காலடி வைத்ததால் நானும் ஒரு ஆர்ம்ஸ்ட்ராங்கே....

> அவைகள் உன்னைப் போல் அழகிய சிவந்த கன்னங்களைப் பெறவில்லையே என்று வெட்கிச்
> சிவக்கின்றன.

> நீ சுவாசிப்பதால்தானே
> நான் உயிர் வாழ்கின்றேன்....?

பின்னிட்டீங்க போங்க!

> நீ சுவாசித்து வெளிவிடும் காற்றைத்தானே
> நானும் சுவாசிக்கிறேன்....?

பார்த்து சார் கார்பன்டை ஆக்சைடை சுவாசிச்சிங்கன்னா ;-)

> உன் இதயத்தின்
> லப்..டப் ஒலியினை
> டிஜிட்டல் துல்லியமாய்
> என்னால் கேட்கமுடிகின்றதே...!
> ஓ....
> நான் வாழ்வது உன்னிதிய்த்திலல்லவா.....?

> நிலவு கூட
> உன்னைக் கண்டு
> பொறாமைப்படுகின்றதே....?
>
> மழைத்துளி கூட உன் மீது பட்டபின்
> குளிர்கின்றதே....
>
> எலக்ட்ரான்கள் கூட
> உன்னைக் கண்டு
> தன் ஓட்டத்தினை நிறுத்துகின்றனவே....?
>
> நியூட்டன் கூட
> உன் காந்தஈர்ப்பினைக்
> கண்டபின்தானோ்
> புவியீர்ப்பு விதியைக் கண்டுபிடித்திட்டார்...?
>
> அள்ள அள்ளக் குறையும்
> இது பெளதிகம்
> ஆனால் உன்னிடம்
> என் காதலும் அன்பும் மட்டும் ஏன் குறையவில்லை...?
> பெளதிகம் பொய்யோ....?
>
> Properties of Matter ல் உள்ள திட திரவ நீர்ம
> நிலைகளாக நான் மாறிட்டாலும் கூட
> அதிலும் நீயே மூலக்கூறாய் இருக்கின்றாய்....
>


நல்லா இருக்குங்க!


> லப்...டப் ற்குப் பதிலாக
> உன் பெயரே ஒலிக்கும்...

எந்த டாக்டராவது பாக்கையிலதான் பில் கிழிய போகுது ;-)

பாராட்டுக்கள்ங்க ரிஷி

-சுரேஷ்பாபு
=====================================================================================

from சூர்யா
reply-to muththamiz@googlegroups.com,
to muththamiz@googlegroups.com,
date Oct 25, 2007 12:37 AM
subject [muththamiz] Re: ரிஷியின் பக்கம்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details Oct 25



Reply


அன்பு ரவீந்த்தர்,

அருமையான் புது கவிதை. உங்கள் கவிதையில் ஒரு புதிய கோணத்தை, பரிமாணத்தை தெளிவாய் காண முடிகிறது.

உங்கள் சிந்தனை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் ஊடுறுவி உயர்வான, உன்னதமான கவிதை நயம் படைத்திருக்கிறது.

படித்தேன். ஒவ்வொரு வார்த்தைகளையும் சுவைத்தேன்.

இன்னும் எதிர்பார்ப்புடனு, மிக்க அன்புடனும்,
====================================================================================

தணிகை
reply-to muththamiz@googlegroups.com,
to muththamiz@googlegroups.com,
date Oct 25, 2007 8:48 AM
subject [muththamiz] Re: ரிஷியின் பக்கம்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details Oct 25



Reply


நல்லா இருக்குஇ ரவீந்தீரன்
==========================================================================

sahanaa
reply-to muththamiz@googlegroups.com,
to முத்தமிழ் ,
date Oct 25, 2007 9:53 AM
subject [muththamiz] Re: ரிஷியின் பக்கம்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details Oct 25



Reply


உங்கள் பயணத்தில் நாங்களும் உடன் வருவதை உணர்கின்றோம்.
அழகும் வலிமையும் சேர்ந்த வார்த்தைகளின் துள்ளாட்டம்
நான் உங்கள் எழுத்துக்கு ரசிகை
=======================================================================================

jeya lakshmi
reply-to muththamiz@googlegroups.com,
to muththamiz@googlegroups.com,
date Oct 25, 2007 12:49 PM
subject [muththamiz] Re: ரிஷியின் பக்கம்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details Oct 25



Reply




அண்ணா அருமை, சொல் வார்த்தை கிடைக்கவில்லை
- Show quoted text -
============================================================================

GEETHA SAMBASIVAM
reply-to muththamiz@googlegroups.com,
to muththamiz@googlegroups.com,
date Oct 25, 2007 11:04 PM
subject [muththamiz] Re: ரிஷியின் பக்கம்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details Oct 25



Reply


ரிஷி, மனைவியை விட்டுத் தனியா இருக்கீங்களோ? அதான் இப்படி! :))))))
=====================================================================================
ஆஹா!!..

வாழ்த்துகள் ரிஷி அண்ணா. நல்ல காலம் கவிதை என்று சொல்லி ஏமாற்றாமல்
கவி+கட்டுரை என்பதை சொல்லிவிட்டு எழுதினீர்கள் பாருங்கள் அதற்கு ஒரு சபாஷ்..

சிலவரிகளை இரசித்தேன் சில வரிகளில் சிரித்தேன்.

--
தேவர்பிரான் கிருட்டினன்...
கற்றது ஒன்னுமில்லை..!!







--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
====================================================================================

Shylaja N
reply-to muththamiz@googlegroups.com,
to muththamiz@googlegroups.com,
date Oct 27, 2007 8:37 PM
subject [muththamiz] Re: [NAMBIKKAI] Re: ரிஷியின் பக்கம்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com

hide details Oct 27



Reply


ரிஷி ரவி......காதல் கவிதையா ஓஹோ????:):):) ஆனாலும்
இதில filtercoffee டச் கம்மி இருந்தாலும் பாஸ் மார்க்!!!

====================================================================================

தாயுமானவன்....

இது ஆண்களுக்காக....(கவிசிட்டுரை = கவிதை+சின்னக்கட்டுரை)

ஆண் எப்படி பெண்ணாக முடியும்....?
ஆனால் இன்று நீ ஆனாயே...

நான் சோகமானாள்
தோள் கொடுத்து என்னை
ஆதரவாய் அணைக்கின்றாயே...?
என் முடிவருடி தலைகளைக்கும்பொழுது
உன் அன்பின் வெளிப்பாடு புரிகின்றது...

என் கண்ணில் நீர் வழிந்தால்....
உன் நெஞ்சில் குருதி வழிகின்றதே...

நான் தூங்கும்வரை என்னைத் தாலாட்டித் தூங்கவைக்கின்றாயே....
நான் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் சமையல் கட்டில் நீ செய்கின்றாயே....?

என் கால்கள் நோ கண்டிட்டவேளையில் இதமாய் வெந்நீர் தடவி நீவிடுகின்றாயே...?

நான் ஆடும் ருத்ரத்திற்கெல்லாம்
அமைதியாய் செவிசாய்க்கின்றாயே...

குழந்தைகளைக் குளிப்பாட்டி சோறூட்டி பாடசாலைக்கு அழைத்துச்செல்கின்றாயே...?

நீ ஒரு தந்தை மட்டுமல்ல....
தாயுமானவன்...


நீயும் எனக்கொரு அம்மாவே...!

அன்புடன்
ஏழேழு ஜென்மத்திற்கும் நீயே என் கணவனாக வரவிரும்பும் உன் அன்பு மனைவி

Thursday, August 23, 2007

மந்திரவாதி

மந்திரவாதி...

என்னைப்
புத்தகமில்லா
ஒரு அறையில்
பூட்டிவையுங்கள்.

அடுத்த ஒரு மணிநேரத்தில்
அங்கே
ஒரு புத்தகமிருக்கும்.
அதை-
நானே எழுதியிருப்பேன்.

ஒரு வானத்தின் கீழ்

ஒரு
வானத்தின் கீழ்
வந்துவிட்டோம்
வாழவில்லையென்றால் எப்படி....?

கவலைப்படாதே...
அடிச்சறுக்கல்கள் கூட
அடையாளங்களாகவும்.

தேனெடுத்தால்
தேனீ கொட்டுகின்றது
ரோஜா பறித்தால்
முள் குத்துகின்றது.
அதற்காக
அடையாமலிருந்தால் எப்படி...?

பாதைகள்
முழுதும் கற்கள்தான்
பார்த்து
நடக்கவேண்டியது நாமன்றோ...?

வெறும்
வாழ்த்துக்களே நம்மை
வாழவைத்துவிடுவதில்லை
வெறும்
வசைமொழிகளே நம்மைத்
தாழவைத்துவிடுவதில்லை.

குழந்தை
எதை நம்பி ஜனிக்கிறது...?
வெறும் நம்பிக்கை....!

நம்பிக்கை... நம்பிக்கை...
அதுதானே வாழ்வு...!
இல்லையா...?

ஒரு
வானத்தின் கீழ்
வந்துவிட்டோம்
வாழவில்லையென்றால் எப்படி...?

--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்