Thursday, August 23, 2007

மந்திரவாதி

மந்திரவாதி...

என்னைப்
புத்தகமில்லா
ஒரு அறையில்
பூட்டிவையுங்கள்.

அடுத்த ஒரு மணிநேரத்தில்
அங்கே
ஒரு புத்தகமிருக்கும்.
அதை-
நானே எழுதியிருப்பேன்.

ஒரு வானத்தின் கீழ்

ஒரு
வானத்தின் கீழ்
வந்துவிட்டோம்
வாழவில்லையென்றால் எப்படி....?

கவலைப்படாதே...
அடிச்சறுக்கல்கள் கூட
அடையாளங்களாகவும்.

தேனெடுத்தால்
தேனீ கொட்டுகின்றது
ரோஜா பறித்தால்
முள் குத்துகின்றது.
அதற்காக
அடையாமலிருந்தால் எப்படி...?

பாதைகள்
முழுதும் கற்கள்தான்
பார்த்து
நடக்கவேண்டியது நாமன்றோ...?

வெறும்
வாழ்த்துக்களே நம்மை
வாழவைத்துவிடுவதில்லை
வெறும்
வசைமொழிகளே நம்மைத்
தாழவைத்துவிடுவதில்லை.

குழந்தை
எதை நம்பி ஜனிக்கிறது...?
வெறும் நம்பிக்கை....!

நம்பிக்கை... நம்பிக்கை...
அதுதானே வாழ்வு...!
இல்லையா...?

ஒரு
வானத்தின் கீழ்
வந்துவிட்டோம்
வாழவில்லையென்றால் எப்படி...?

--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்